Friday, January 30, 2009

தமிழ்ப் புலமை



இறையருட் கவிமணி அவர்கள் சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தமபாளையம், அதிராம்பட்டினம் முதலான ஊர்களில் தமிழ்த்தொண்டாற்றிய பேராசிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மீலாது விழா கவியரங்கத்தை தலைமையேற்று நடத்தியபோது, இச்செய்திகள் அனைத்தையும் ஒரே வரியில் அடக்கிய அவரது தனித்திறன் நிறைந்த தமிழ்ப் புலமையைப் பாருங்கள்.

"பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்
பாடிவிட்டுப் பட்டிருக்கும் பறவையெனை அழைத்துவந்தே
பாட்டரங்கில் மாட்டிவிட்டீர்
பாப்புனையத் தூண்டிவிட்டீர்"

பாடி = வாணியம்பாடி - இசுலாமியக் கல்லூரி
நடுநகர் = திருச்சி - ஜமால் முகம்மது கல்லூரி
பாளையம் - உத்தமபாளையம் - ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி
பட்டினம் = அதிராம்பட்டினம் - காதிர் முகைதீன் கல்லூரி

2 comments:

  1. எனது திருமணத்திற்கு இறையருட் கவிமணி அவர்கள் பேசிய வாழ்த்துரை இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.


    அந்த புகைப் படமும் என்னிடம் உள்ளது எங்கள் குடுன்ப நண்பர் அவர் . நான் நீடூர்
    அல்ஹாஜ் ஏ.எம்.சயீத் வழக்கறிஞர். அவர்களின் இளவல் (தம்பி)

    ReplyDelete
  2. please visit:-பாருங்கள்

    * NIDUR SEASONS
    * nidurseasons.com
    * seasons nidur (wordpress)

    ReplyDelete