Wednesday, January 21, 2009

புலவர் ஹெச். முஸ்தபா

நிறைபொருட் கவியணி நெஞ்சர்
இறையருட் கவிமணி என்பார்
மறைந்தனர் புவிதனில் என்றார்
நிறைந்தனர் உளமெலாம் என்பேன்!

இறைமறை நபியறம் என்றே
முறையுற மொழிந்தனர் நன்றே
துறைதனில் தமிழ்ப்புலம் கண்டே
உறைந்தனர் புகழ்த்தலம் கொண்டே!

மறப்பற நினைநினை வூட்டிச்
சிறப்புற உரை, கவி நாட்டி
இறப்பெனும் கட்டளை ஏற்றார்
திறத்தினின் அடியாராய் ஏற்பாய்!

உறைவிடம் வழங்கநீ யல்லால்
முறையிடப் பிறஇடம் உண்டோ?
இறைஞ்சினோம் அடிமைகள் உன்பால்
குறையெலாம் பொறுத்தருள் அல்லாஹ்

(ஆமீன்)

- புலவர் ஹெச்.முஸ்தபா, M.A.,M.A.,B.Ed.,

1 comment:

  1. தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன்னிசை மாலையும் புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சும்

    Please visit
    http://nidurseasons.blogspot.com/2011/07/blog-post_25.html

    ReplyDelete